நானி - சாய்பல்லவி படம் ஆஸ்கருக்கு பரிந்துரை | எப்படி இருந்த கீர்த்தி இப்படி | கனடாவிலிருந்து வந்த பாடகி | வருகிறான் ‛சோழா சோழா' | குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த சூரி | திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்த தனுஷ் | ‛லால் சிங் தத்தா' படத்தை இணையதளத்தில் வெளியிட்ட இரண்டு பேர் கைது | ஹிந்தியில் அறிமுகமாகிறார் அனுபமா பரமேஸ்வரன் | ஆர்ஆர்ஆர் படத்திற்கு 99 சதவீதம் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு : அனுராக் காஷ்யப் கணிப்பு | கிர்த்தி ஷெட்டிக்கு இரண்டாவது அதிர்ச்சி |
அக்ஷய்குமார், மனுஷி சில்லர், சோனு சூட் மற்றும் பலர் நடிப்பில் ஹிந்தியில் 200 கோடி ரூபாய் செலவில் தயாரான சரித்திரப் படமான 'சாம்ராட் பிரித்விராஜ்' ஜுன் 3ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. ஆனால், படம் எதிர்பாராதவிதமாக படுதோல்வி அடைந்தது.
தியேட்டர் வசூல் மூலம் சுமார் 40 கோடி, இசை உரிமை மூலம் சுமார் 10 கோடி மட்டுமே படத்தின் வரவாகக் கிடைத்தது. உடனடியாக ஓடிடியில் விற்றால் 100 கோடி வரை உரிமை கிடைக்கும் என்ற சூழ்நிலையில் படத்தை அமேசான் ஓடிடி தளத்திற்கு விற்றார்கள். இருப்பினும் 50 கோடி ரூபாய் அளவிற்கு படத்திற்கு நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஹிந்தியில் தயாரான இந்தப் படம் தமிழ், தெலுங்கில் வரும் ஜுலை 1ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தியேட்டர்களில் கிடைக்காத வரவேற்பு ஓடிடி தளத்தில் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.