விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை ரீமேக் செய்த விசு | பிளாஷ்பேக்: அந்தக் கால 'மிடில் கிளாஸ்' | அப்பாவுக்கு என்னாச்சு? கவுதம் ராம் கார்த்திக் விளக்கம் | அமீரகத்திற்காக சிறப்பு பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் |

பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபன், அவர் ஒருவர் மட்டுமே நடித்து, இயக்கியிருந்த படம் 'ஒத்த செருப்பு'. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு பார்த்திபனுக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
இந்த படத்திற்கு பிறகு பார்த்திபன் மற்றுமொரு புதிய முயற்சியாக 'இரவின் நிழல்' என்ற படத்தை நடித்து இயக்கியுள்ளார். வரலட்சுமி, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இரவின் நிழல் திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் நான் லீனியர் கதையம்சம் கொண்ட திரைப்படம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் தனது அறிவித்துள்ளார் . அதன்படி இப்படம் வருகின்ற ஜூலை 15-ஆம் தேதி வெளியாகிறது.




