Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.400 கோடியைக் கடந்த 'விக்ரம்' ; அடுத்து என்ன ?

27 ஜூன், 2022 - 18:50 IST
எழுத்தின் அளவு:
Vikram-collected-Rs.400-crore,-what-next

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து ஜுன் 3ம் தேதி வெளியான படம் 'விக்ரம்'. படம் வெளியான 25 நாட்களில் ரூ.400 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

150 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்குள் உருவான இப்படம் 400 கோடி ரூபாய் வசூலித்து ஏறக்குறைய 250 கோடி வரையில் லாபத்தைக் கொடுத்திருக்கிறது. இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0' படம் 600 கோடி செலவில் தயாராகி 800 கோடி வசூலித்ததுதான் தமிழ் சினிமாவின் அதிக வசூல் சாதனையாக இருந்து வருகிறது.

ஆனால், லாபம் என்ற வகையில் '2.0' படத்தை விடவும் 'விக்ரம்' படம்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். மேலும், தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிக லாபத்தைக் கொடுத்த படம் என நம்பர் 1 இடத்தை ஏற்கெனவே 'விக்ரம்' பிடித்துவிட்டது என்றும் சொல்கிறார்கள்.

கமல்ஹாசனின் 'விக்ரம்' பட வசூல் சாதனையால் அவருக்கான மார்க்கெட் மதிப்பு இன்னும் அதிகமாகி உள்ளது. அவர் நடித்து வரும் 'இந்தியன் 2' படம் சர்ச்சைகளைக் களைந்து படமாக்கப்பட்டு முடிந்தால் இதை விடவும் வசூல் சாதனை படைக்கும் என்கிறார்கள்.

கமல்ஹாசன் நடிப்பதாக இருந்த 'சபாஷ் நாயுடு, தலைவன் இருக்கிறான்' படங்களை தூசித் தட்டி மீண்டும் எடுத்தால் கூட அப்படம் வியாபாரம் ஆகிவிடும் என்பதுதான் உண்மை.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
புதிய சாதனை படைத்த 'தி வாரியர் - புல்லட்' பாடல்புதிய சாதனை படைத்த 'தி வாரியர் - ... நடிகர் ‛பூ' ராமு மறைவு நடிகர் ‛பூ' ராமு மறைவு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
30 ஜூன், 2022 - 11:58 Report Abuse
Raj அவருடைய மருதநாயகம் மறுபடி எடுக்கவேண்டும்
Rate this:
mohan - chennai,இந்தியா
28 ஜூன், 2022 - 16:55 Report Abuse
mohan அப்போ பீஸ்ட் படம் வசூல் இன்னும் விக்கரம் முறியடிக்கலாயா ? என்ன கொடுமை சரவணனை ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in