பெங்களூரு ஏஎம்பி சினிமாஸ் தியேட்டரில் மகேஷ்பாபு | சென்னையும், தமிழும்…. பிரபாஸ் நெகிழ்ச்சி… | 'டாக்சிக்' டீசர் : கன்னடத்தை விட தெலுங்கு, ஹிந்தி 'டாப் வியூஸ்' | 4 இடியட்ஸ் : ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை | யார் ஹீரோ... திணறும் நெல்சன்... 47 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி, கமல் பட அறிவிப்பு வீடியோ வெளியீடு | என் கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கும் வெற்றி | பொன்னியின் செல்வன் பாடலில் தாகர் குடும்பத்திற்கு கிரெடிட் கொடுக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்புதல் | பிளாஷ்பேக் : மோகன்லால் கேரக்டரில் நடித்த பாண்டியராஜன் | பிளாஷ்பேக்: நாடகத்தால் வெற்றி பெற்ற படம் | துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன்… தொடரும் காதல்?? |

‛‛பூ, தங்கமீன்கள், நீர்ப்பறவை'' உள்ளிட்ட பல படங்களில் நடித்த ராமு(60) காலமானார்.
சினிமாவில் யதார்த்தமாக, வாழ்வியலை அப்படியே பிரதிபலிக்க கூடிய நடிகர் என பெயர் எடுத்தவர் ராமு. சசி இயக்கிய ‛பூ' படத்தின் மூலம் பிரபலமாக ‛பூ' ராமு என அழைக்கப்பட்டார். தொடர்ந்து நீர்ப்பறவை, தங்கமீன்கள், பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரைப்போற்று, கோடியில் ஒருவன் என பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் குறைவு என்றாலும் அவர் நடித்த வேடங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன. நாடக கலைஞர், நடிகர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகம் கொண்டவர் ராமு.
இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சென்னை, அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்த அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக காலையில் செய்தி வந்தது. இந்நிலையில் மாலை 7 மணியளவில் அவரது உயிர் சிகிச்சை பலன் இன்றி பிரிந்தது.
கம்யூனிசத்தில் அதிக பற்று கொண்ட ராமுவிற்கு ஒரு மனைவியும், மகளும் உள்ளனர். இவரது சொந்த ஊர் சென்னையை அடுத்த உள்ள ஊரப்பாக்கம் ஆகும். அவரின் இறுதிச்சடங்கு நாளை(ஜூன் 28) செவ்வாய் அன்று அவரது சொந்த ஊரில் நடைபெறுகிறது.
ராமுவின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




