ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா |

தமிழ் இயக்குனராக லிங்குசாமி தெலுங்கில் அறிமுகமாகும், தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனி தமிழில் அறிமுகமாகும் படம் 'தி வாரியர்'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் வரும் ஜுலை 14ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தில் இடம் பெற்ற 'புல்லட்' பாடல் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சிலம்பரசன், ஹரிப்ரியா பாடியுள்ள இந்தப் பாடல் யு டியூபில் தமிழில் 57 மில்லியன் தெலுங்கில் 73 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் மியூசிக் ஆப்களான ஸ்போட்டிவை, மோஜ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் உள்ளிட்டவற்றில் ஒட்டு மொத்தமாக 11 பில்லியன் முறை கேட்கப்பட்டுள்ளதாம். தென்னிந்திய மொழிப் படம் ஒன்றின் பாடல் 10 பில்லியன் சாதனையைப் படைத்துள்ளது இதுவே முதல் முறையாம்.
பாடலுக்குக் கிடைத்துள்ளது போலவே படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என படக்குழுவினர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.