மலையாளத்தை புரிந்து நடிப்பது கஷ்டமாக இருக்கிறது ; ஐஸ்வர்யா ராஜேஷ் | மோகன்லால் படத்தால் தாமதமாகும் திலீப் பட வேலைகள் | கணவரின் நடனத்தில் 36,000 குறைகளை கண்டுபிடிக்கும் கத்ரீனா கைப் | ராமன் அல்ல கர்ணன் ; ஆதிபுருஷ் பிரபாஸை விமர்சித்த கஸ்தூரி | டிம்பிள் ஹயாதி மீதான வழக்கை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு | இளமைகால கவர்ச்சி படத்தை வெளியிட்ட ஜீனத் அமன் | லாந்தர்: விதார்த் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் | கமலுக்கு வில்லன் ஆனார் எஸ்.ஜே.சூர்யா: அதிகாரப்பூர்வ தகவல் | ஓடிடியில் வெளியாகும் ரகுல் பிரீத் சிங் படம் | எனது காதலைக் கண்டுபிடித்தேன் - வருண் தேஜ் |
எந்த ஒரு தகவல் வேண்டுமென்றாலும் உடனே அனைவரும் கூகுள் செய்வதுதான் வழக்கம். அந்த விதத்தில் இந்த 2022ம் ஆண்டின் அரையாண்டில் ஆசிய அளவில் அதிகமாக தேடப்பட்டவர்களின் 100 பேர் அடங்கிய பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதில் தமிழ் நடிகரான விஜய் 22வது இடத்தைப் பிடித்துள்ளார். தென்னிந்திய நடிகர்களில் அல்லு அர்ஜுன் 19வது இடத்தில் உள்ளார். கேஜிஎப் நடிகர் யஷ் 40வது இடத்திலும், மகேஷ் பாபு 47வது இடத்திலும், ஆர்ஆர்ஆர் நடிகர் ராம்சரண் 53வது இடத்திலும், ஜுனியர் என்டிஆர் 58வது இடத்திலும், பிரபாஸ் 68வது இடத்திலும் உள்ளனர். மற்ற தமிழ் நடிகர்களில் தனுஷ் 61வது இடத்திலும், சூர்யா 63வது இடத்தையும், ரஜினிகாந்த் 77வது பிடித்துள்ளனர். இந்தப் பட்டியலில் அஜித், கமல்ஹாசன் ஆகியோர் இடம் பெறவில்லை.
தென்னிந்திய நடிகைகளில் காஜல் அகர்வால் 15வது இடத்திலும், சமந்தா 18வது இடத்திலும், ராஷ்மிகா மந்தனா 20வது இடத்திலும், நயன்தாரா 33வது இடத்திலும், தமன்னா 37வது இடத்திலும், பூஜா ஹெக்டே 44வது இடத்திலும், அனுஷ்கா 56வது இடத்திலும், கீர்த்தி சுரேஷ் 62வது இடத்திலும் ரகுல் ப்ரீத் சிங் 91வது இடத்திலும் உள்ளனர்.
தமிழ் நடிகர் விஜய்யை விடவும் நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா, ராஷ்மிகா அதிகம் தேடப்பட்டவர்களாக உள்ளார்கள்.
ஹிந்தி நடிகைகள் காத்ரினா கைப் 7வது இடத்தையும், ஆலியா பட் 8வது, பிரியங்கா சோப்ரா 9வது இடத்தையும், நடிகர்கள் சல்மான் கான் 11வது இடத்தையும், ஷாரூக்கான் 12வது இடத்தையும் பெற்றுள்ளனர்.