பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

பொதுவாக சினிமாவில் வெளியில் தெரியாத ஒரு கொடூரம் உண்டு என்றால் அது பிறந்த குழந்தையை நடிக்க வைப்பது, பிரசவ வார்டுகளில் கதையின் கேரக்டர்களுக்கு குழந்தை பிறப்பது போன்ற காட்சியோ, அல்லது பிறந்த குழந்தையை வைத்துக் கொண்டு தாலாட்டு பாடுவது போன்ற காட்சியோ எடுக்கப்படும். இன்னும் சில படங்களில் அப்படியே ரத்தத்தோடும், அறுக்கப்படாத தொப்புள் கொடியுடன் காட்டுவார்கள்.
இதுபோன்ற காட்சிகளுக்கு முன்பு பொம்மைகளை பயன்படுத்துவார்கள். ஆனால் இப்போது நிஜ குழந்தைகளையே காட்டுகிறார்கள். இப்படியான குழந்தைகளை கொண்டு வர தனியாக ஏஜெண்ட் இருக்கிறார்கள். அவர்கள் சினிமாவில் நடிக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்களின் விபரங்களை சேகரித்து அவர்களின் குழந்தைகளை நடிக்க வைப்பார்கள். இதற்கு பெரிய தொகை சம்பளமாக கொடுப்பார்கள்.
இந்த நிலையில் இனி 3 மாத்திற்கு உட்பட் குழந்தைகளை சினிமாவில் நடிக்க வைக்ககூடாது. மூன்று மாதத்துக்கு மேல் உள்ள குழந்தையை நடிக்க வைக்க மாவட்ட ஆட்சியரிடம் தயாரிப்பாளர்கள் அனுமதி பெற வேண்டும். இரவு நேரங்களில் குழந்தைகளை படப்பிடிப்பில் ஈடுபடுத்தக்கூடாது, இந்த விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மீறினால், மூன்று வருடம் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. விரைவில் இது அரசாணையாக வெளியிடப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது.




