Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

30 வருடங்களை நிறைவு செய்த 'அண்ணாமலை'

27 ஜூன், 2022 - 10:47 IST
எழுத்தின் அளவு:
Annamalai-completed-30-years

ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று 'அண்ணாமலை'. இப்படம் வெளிவந்து இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தேவா இசையமைப்பில் ரஜினிகாந்த், குஷ்பு, சரத்பாபு, மனோரமா, ராதாரவி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, ரேகா, வைஷ்ணவி மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம்.

இப்படத்திற்காக முதலில் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் இயக்குனர் வசந்த். ஆனால், திடீரென அவர் மாற்றப்பட்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியது இதுவே முதல் முறை. இந்தப் படத்திற்குப் பிறகும் இக் கூட்டணி இணைந்து 'வீரா, பாட்ஷா' ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தது.

ரஜினிகாந்த் படத்திற்கு தேவா இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டது அப்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் படத்தில் இடம் பெற்ற பாடல்களை சூப்பர் ஹிட்டாகவே கொடுத்தார் தேவா. ''வந்தேன்டா பால்காரன், அண்ணாமலை, கொண்டையில் தாழம்பூ, வெற்றி நிச்சயம், ஒரு பெண் புறா, றெக்கை கட்டி பறக்குதடி,” என அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது. அதற்குப் பிறகு தான் தேவா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.

ஏழை பால்காரரான ரஜினிகாந்த்தும், பணக்கார ஹோட்டல் முதலாளியான சரத்பாபும் சிறு வயது முதலே நண்பர்கள். ரஜினிகாந்திற்குச் சொந்தமான வீட்டை ஏமாற்றி அந்த இடத்தில் ஹோட்டல் ஒன்றைக் கட்டுகிறார் சரத்பாபுவின் அப்பா ராதாரவி. மேலும், ரஜினியும், சரத்தும் பிரிவதற்கான வேலைகளையும் செய்கிறார். நண்பனால் ஏமாற்றப்பட்ட ரஜினி, பின்னர் தனது முயற்சியில் பெரிய ஹோட்டல் முதலாளியாகிறார். அதற்குப் பிறகு அவர்களது குடும்ப வாரிசுகளாலும் மோதல் தொடர்கிறது. அதன் முடிவு என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ரஜினிக்குப் பொருத்தமான ஹீரோயிசக் கதை, அம்மா சென்டிமென்ட், நட்பு, காதல், நகைச்சுவை என அனைத்தும் கலந்த பக்கா கமர்ஷியல் படமாக இந்தப் படம் வெளிவந்து ரஜினி ரசிகர்களை முழுவதும் திருப்திப்படுத்தியது.

இந்தப் படத்தில்தான் ரஜினிகாந்த் பெயர் வரும் போது 'சூப்பர் ஸ்டார்' என்ற கிராபிக்ஸ் கார்டு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது இன்று வரையும் தொடர்கிறது.

25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்ட படம். 'பாட்ஷா' படம் வரும் வரை 'அண்ணாமலை' படம்தான் தமிழ் சினிமாவில் அதிக வசூலைக் குவித்த படமாக இருந்தது.

'பாட்ஷா' படத்திற்குப் பிறகு இன்றும் ரஜினி ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் படமாக 'அண்ணாமலை' படம் இருக்கிறது.



ரஜினி - சுரேஷ் கிருஷ்ணா சந்திப்பு
இதனிடையே அண்ணாமலை படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதையொட்டி நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. அப்போது அண்ணாமலை படம் குறித்த மலரும் நினைவுகளையும் இருவரும் பகிர்ந்து கொண்டனர். ரஜினியை சுரேஷ் கிருஷ்ணா சந்தித்த போட்டோ வைரலாகி, ரசிகர்களும் அண்ணாமலை படத்தை கொண்டாடினர்.


Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மதுரையில் களைகட்டியது இளையராஜா இசை நிகழ்ச்சிமதுரையில் களைகட்டியது இளையராஜா இசை ... 25 வருடங்களை நிறைவு செய்த 'சூர்ய வம்சம்' 25 வருடங்களை நிறைவு செய்த 'சூர்ய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Vijay - Chennai,இந்தியா
28 ஜூன், 2022 - 07:45 Report Abuse
Vijay விக்ரம் வெற்றி ரஜினி ரசிகர்களை படாதபாடு படுத்துகிறது
Rate this:
Vena Suna - Coimbatore,இந்தியா
28 ஜூன், 2022 - 00:13 Report Abuse
Vena Suna அப்போ அவர் கட்சி ஆரம்பித்து இருந்தால் முதல்வர் ஆகி இருக்கலாம்,
Rate this:
27 ஜூன், 2022 - 15:30 Report Abuse
ஆரூர் ரங் இளையராஜா வுடன் தயாரிப்பாளர் K. பாலசந்தர் க்கு இருந்த பிரச்னையால் தேவா வுக்கு லக்கி பிரைஸ் அடித்தது. அவரும் அதனை நன்கு பயன்படுத்திக் கொண்டார். அதே ஆண்டில் கவிதாலயா தயாரித்த ( ராஜா இல்லாத) வானமே எல்லை, ரோஜா அண்ணாமலை ஆகிய மூன்று படங்களும் மியூசிக்கல் சூப்பர்😁 ஹிட். இன்னும் சொல்லப் போனால் அதன் பிறகு ராஜாவுக்கு இறங்குமுகமே..
Rate this:
Venkat -  ( Posted via: Dinamalar Android App )
27 ஜூன், 2022 - 11:53 Report Abuse
Venkat Rajini negative role in second half is awesome
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27 ஜூன், 2022 - 11:10 Report Abuse
Natarajan Ramanathan இந்த படத்தை ஒருமுறை பார்க்கணும் என்று நினைக்கிறேன்.... டயம் இல்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in