அநாகரீகமாக பேசிய நெட்டிசனை வச்சு செய்த சுனிதா | சீரியலிலிருந்து விலகிய மனிஷா ஜித் | பாரீஸ் சுற்றுலாவில் பிரியா பவானி சங்கர் | சமந்தாவை நேரில் சந்தித்தால்…. நாக சைதன்யா பதில் | ஆகஸ்ட்டில் மூன்று முக்கிய படங்கள் ரிலீஸ் | டிரணட் ஆகும் சிவன் பாடல் | வசூலை வாரிக் குவிக்கும் சீதா ராமம் | இந்தியாவில் 100 கோடி வசூலித்த தோர்: அதிகாரபூர்வ அறிவிப்பு | தமிழ் ராக்கர்ஸ் : கலை உலகின் வலியை சொல்லும் தொடர்: அறிவழகன் | வெளியானது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 புரோமோ, தமிழில் எப்போது ? |
கார்த்திக் நடிப்பில் மூன்று படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரப்போகிறது. முத்தையா இயக்கத்தில் அவர் நடித்துள்ள விருமன் படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகிறது. அதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது. அந்த படத்தை அடுத்து தீபாவளிக்கு பிஎஸ்.மித்ரன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள சர்தார் படம் திரைக்கு வரப்போகிறது.
இப்படி கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் இந்த ஆண்டில் வெளியாக உள்ள நிலையில், இந்த படங்களைத் தொடர்ந்து ஜோக்கர், குக்கூ உள்ளிட்ட சில படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கார்த்தி. தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த படத்தில் பேட்ட, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு ஜப்பான் என்று டைட்டில் வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.