‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

1982ம் ஆண்டில் முதல் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய மீனா, அன்புள்ள ரஜினிகாந்த் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். அதையடுத்து 1990ம் ஆண்டு தெலுங்கில் ராஜேந்திர பிரசாத்துக்கு ஜோடியாக நவயுகம் இந்தப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர், 1990, 2000 ஆண்டுகளில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் மீனா. அந்த வகையில் அனைத்து தென்னிந்திய மொழி ஹீரோக்களுடனும் டூயட் பாடிவிட்டார், இந்நிலையில் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்துடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் மீனா. அதில், 32 ஆண்டுகள் கழித்து என்னுடைய முதல் ஹீரோவுடன் மீண்டும் நடிக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.