பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
ஆஹா ஓடிடி தளத்தில் அடுத்து வெளியாக இருக்கும் தொடர் ஆன்யாஸ் டுடோரியல். ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் ஹாரர் தொடராக உருவாகியுள்ளது. ஆர்கா மீடியா ஒர்க்ஸ் இத்தொடரை தயாரித்துள்ளது. ஜூலை 1ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த தொடரின் அறிமுக நிகழ்ச்சியில் ரெஜினா கூறியதாவது: ஆன்யாஸ் டுடோரியல் போன்ற சைக்காலஜிகள், திரில்லர் கதைகள் வருவது மகிழ்ச்சி, நான் நடித்த மது கதாபாத்திரத்தை கண்டிப்பாக தவற விடக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன். பல்லவி போன்ற திறமையான ஆட்கள் சினிமாவிற்கு வருவது மகிழ்ச்சி.
நான் அறிமுகமான போது திரைத்துறையில் பெண்கள் மிக குறைவாக இருந்தார்கள் இப்போது ஆண்களுக்கு இணையாக பெண்கள் வளர்ந்திருப்பது மகிழ்ச்சி. பல பெண்கள் இணைந்து இந்த தொடரை உருவாக்கி உள்ளோம். இதனை இயக்கி உள்ள பல்லவி ஏ.ஆர்.முருகதாஸ் போன்று பக்கா கமர்ஷியல் இயக்குனராக வளர்வார். பல பெரிய ஹீரோக்களை இயக்குவார். இவ்வாறு ரெஜினா பேசினார்.