நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | 'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி |
வினோத் உடன் மூன்றாவது முறையாக அஜித் இணைந்துள்ளார். பெயரிடப்படாத இந்த படத்தை தற்காலிகமாக ‛அஜித் 61' என்றே குறிப்பிட்டு வருகின்றனர். வங்கி கொள்ளை தொடர்பான கதையில் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது. ஐதராபாத்தில் பாதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. தற்போது அஜித் ஐரோப்பா நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் படப்பிடிப்பு முடிவடைய இன்னும் கூடுதல் காலமாகும் என்பதால் ஏற்கனவே திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நிறைவடையாது என்கிறார்கள். இதனால் தீபவாளி ரிலீஸ் என கூறப்பட்ட இந்த படம் டிசம்பருக்கு தள்ளி போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதோடு தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படங்கள் வெளியாகின்றன. இந்த இரண்டு படங்களில் சர்தார் படத்தை உதயநிதியும், பிரின்ஸ் படத்தை அன்புச்செழியனும் வெளியிடுகிறார்கள். இருவருமே தமிழ் சினிமாவில் முக்கிய புள்ளிகள். இதனால் இப்போதே தங்களது படங்களுக்கு தியேட்டர்களை பிளாக் செய்திருப்பார்கள். குறிப்பாக தமிழகத்தில் 1000 தியேட்டர்கள் இருக்கிறது என்றால் இரு நடிகர்களுக்கும் சமமாக குறைந்தது தலா 400 முதல் 450 வரை தியேட்டர்களாவது கிடைக்கும். மீதமுள்ள தியேட்டரில் அஜித் படத்தை வெளியிட முடியாது. ஆகவே அஜித் 61 நிச்சயம் தீபாவளி வெளியீடு இருக்காது என விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.