சாதுவன்: ஒரே இரவில் நடக்கும் கதை | அமிதாப் பச்சன் விளம்பரத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு | விவேக் ஓபராயிடம் பண மோசடி செய்த தயாரிப்பாளர் கைது | அவதூறு மோசடி புகார்: 10 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர ஏ.ஆர்.ரஹ்மான் முடிவு | பாலியல் தொல்லை - ஈஷா குப்தா புகார் | கேரளா, தமிழ்நாடு, அஜர்பைஜான் - 3 இடங்களில் 3 முக்கிய படப்பிடிப்புகள் | ‛ரஜினி 170' துவங்கியது : புதிய தோற்றத்தில் ரஜினி | 'தங்கலான்', அதிகம் எதிர்பார்க்கும் மாளவிகா மோகனன் | 'விக்ரம், ஜெயிலர், லியோ' வரிசையில் 'ரஜினி 170' | 'கோஸ்ட், டைகர்' போட்டியை சமாளிக்குமா 'லியோ' ? |
பிரபல பின்னணி பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன். பேச்சுலர், ஜோம்பி, நோட்டா, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்பட பல படங்களில் பாடியுள்ளார். இதுதவிர இன்ட்ரோ என்ற படத்தில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் அக்ஷய்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் ஆல்பம் ஒன்றில் பாடி நடித்திருக்கிறார் ஸ்வாகதா. நகராதே என்ற இந்த ஆல்பத்தில் வீடியோ ஜாக்கி மாதேவனுடன் இணைந்து நடித்திருக்கிறார், நிவாஸ் கே.பிரசன்னாவுடன் இணைந்து பாடியும் இருக்கிறார். பாடலை கு.கார்த்திக் எழுதியுள்ளார், அஷ்வின் ராஜ் இசை அமைத்துள்ளார். தொடர்ந்து நடிப்பு, பாடல் இரண்டிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் ஸ்வாதகாக கிருஷ்ணன்.