10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து அயலான் படத்தை இயக்கி உள்ளார். ஏலியன் தொடர்பான கதையில் இந்த படம் உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. டிசம்பரில் இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மூலம் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசி உள்ளார் ரவிக்குமார்.
அதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நான் வியந்து பார்த்த ஆளுமை(கமல்). அவரோடு எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம். அவரிடம் லோகேஷ் என்னை அறிமுகம் செய்துவைத்ததும், டைம் டிராவல் பற்றிய ஒரு ஸ்பானிஷ் படத்தின் அம்சங்களை அவர் பகிர்ந்துகொண்டதும் இன்னும் வியப்பு குறையா நிமிடங்கள். வாழ்வின் பரவசம்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் ரவிக்குமார்.