ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020ல் வெளியான படம் சூரரைப்போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் சுயசரிதையை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படம் அக்ஷய்குமார் நடிப்பில் ஹிந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. மாறனாக சூர்யா நடித்திருந்த அந்த கதாபாத்திரத்தில் வீர் என்கிற பெயரில் நடிக்கிறார் அக்ஷய்குமார். சுதா கொங்கராவே இந்த படத்தையும் இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பொம்மி அபர்ணா பாலமுரளி இந்த படத்தின் நாயகன் அக்ஷய் குமாரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அபர்ணா, “பொம்மி வீரை சந்தித்தபொழுது.. இந்த உணர்வுகள் அளவிடமுடியாதது. நன்றி அக்ஷய் குமார் சார்.. உங்களுடைய வார்த்தைகள் எனக்கு நிறைய சொல்லித் தந்தன.. உங்களை வீராக பார்ப்பதில் ரொம்பவே மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.