சாகுந்தலம் வேடத்தில் நடிக்க பயந்த சமந்தா | விஷ்ணு விஷாலின் பதிவால் ரசிகர்கள் குழப்பம் ; அவரே தந்த விளக்கம் | விஜய்யின் லியோ படத்தில் இணையும் பஹத் பாசில் | அஜித் 62வது படத்தின் அறிவிப்பு தள்ளிப்போகிறது | எனது முதல் ஆஸ்கர் விருது ராம் கோபால் வர்மா : இசையமைப்பாளர் கீரவாணி தகவல் | கேப்டன் மில்லர் படத்தின் வீடியோ காட்சி வெளியானது : அதிர்ச்சியில் படக்குழு | அஜித் வீட்டிற்கு சென்ற சூர்யா, கார்த்தி : நேரில் சென்று ஆறுதல் | பொன்னியின் செல்வன் இசை வெளியீடு : கமல், சிம்பு பங்கேற்பு | மோகன் ஜி இயக்கத்தில் பிரஜின் தவறவிட்ட பட வாய்ப்பு | ‛என்னை அரசியலுக்குள் இழுக்காதீர்கள், சமாளிக்க முடியாது' : பாலாஜி முருகதாஸ் டுவீட் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்து திரைக்கு வந்துள்ள படம் விக்ரம். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் கமலுடன் விஜயசேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள், ஜூன் 3ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் கடந்த இரண்டு வாரங்களாக வசூல் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு, கேரளா , ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா என அனைத்து மாநிலங்களிலும் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விக்ரம் படம் 300 கோடி வசூல் சாதனை அடைந்துவிட்டதாக ஏற்கனவே கமல்ஹாசன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.150 கோடி வசூலித்து பாகுபலி-2 படத்தின் சாதனையை முறியடித்துள்ளதாம்.