'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, மீண்டும் அவர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் பகத் பாசில், நரேன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தற்போது 300 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கார் பரிசளித்த கமல்ஹாசன், உதவி இயக்குனர் 13 பேருக்கு அப்பாச்சி பைக் பரிசளித்தார். இந்நிலையில் மாமனிதன் படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம், கமல்ஹாசன் உங்களுக்கு என்ன பரிசு கொடுத்தார் என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஒரு பதில் கொடுத்தார்.
அதில், கமல் சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே எனக்கு பெரிய பரிசுதான். எவ்வளவு பெரிய விஷயம் இது. என்னுடைய வாழ்நாளில் நான் கற்பனைகூடச் செய்திராத விஷயம். இப்படியெல்லாம் நடக்கும் என்று யோசித்தே பார்த்ததில்லை என்று பதில் கொடுத்தார் விஜய் சேதுபதி.
இதேபோல்தான் விக்ரம் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இடத்தில் கமல்ஹாசன் உங்களுக்கு என்ன பரிசு கொடுத்தார் என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, கமல் சார் படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்ததே மிகப்பெரிய பரிசு தான் என்று ஒரு பதில் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.