நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் நாய் | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போட்ட நடிகை | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் மவுன யுத்தம் நடத்திய ஏ.எல்.சீனிவாசன் | ''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 169வது படத்திற்கு ஜெயிலர் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ரஜினி ரசிகர்கள் அந்த டைட்டிலை சோசியல் மீடியாவில் டிரெண்ட் செய்தனர். பல சினிமா பிரபலங்கள் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் சிம்பு நடித்த மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியும், ஜெயிலர் படத்தின் போஸ்டர் வெளியானதை அடுத்து ரஜினிக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவு போட்டிருந்தார்.
அதில், ‛‛எத்தனை குதிரைகள் ஓடினாலும் ரஜினிகாந்த் என்ற இந்த குதிரை விழும் சட்டென எழும். வெற்றிகொள்ளும் குதிரை. சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். ரஜினி என்ற மூன்றெழுத்து மேஜிக், ஜெயிலர் மூலம் மீண்டும் நிகழும் வாழ்த்துக்கள்'' என தெரிவித்தார். ஆனால் சுரேஷ் காமாட்சியின் இந்த பதிவு ரஜினியை கிண்டல் செய்வதாக செய்தி வைரலானது.
அதையடுத்து அதற்கு கண்டனம் தெரிவித்து மீண்டும் ஒரு பதிவு போட்டுட்டுள்ளார் சுரேஷ் காமாட்சி. அந்த பதிவில், பாராட்டிற்கும் கிண்டலுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எழுத வந்துட்டா இப்படித்தான் பூடம் தெரியாமல் சாமி ஆடுவாங்க என்று தெரிவித்துள்ளார்.