'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் சந்திரமுகி. இதன்பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார் என்று பல தகவல்கள் வெளிவந்தது. இதை உறுதி செய்யும் விதமாக சந்திரமுகி 2 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது லைகா தயாரிப்பு நிறுவனம் .
வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் யார் கதாநாயகியாக நடிக்கப்போகிறார் , அல்லது ஜோதிகா மீண்டும் கதாநாயகியாக நடிப்பாரா என்று பலரும் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா அல்லது ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து விரைவில் படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுது.