திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் |

விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் அடுத்தபடியாக ரஜினியின் 169வது படத்தை இயக்கப் போகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் நடிக்க ரஜினியிடம் நெல்சன் சொன்ன கதை அவருக்கு பிடித்து விட்ட போதும், பீஸ்ட் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் அதிருப்தி அடைந்தார் ரஜினி. அதனால் தனது ஆஸ்தான இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமாரை தனது 169வது படத்திற்கு திரைக்கதை எழுத வைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாக ஆரம்பத்திலிருந்தே செய்திகள் வெளியாகின.
ஆனால் ஒருகட்டத்தில் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இப்போது படத்தில் இளம் வயது ரஜினி வேடத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க நெல்சன் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு அரபிக்குத்து பாடலைத்தொடர்ந்து இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதுவதாக கூறப்படுகிறது.