நானி - சாய்பல்லவி படம் ஆஸ்கருக்கு பரிந்துரை | எப்படி இருந்த கீர்த்தி இப்படி | கனடாவிலிருந்து வந்த பாடகி | வருகிறான் ‛சோழா சோழா' | குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த சூரி | திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்த தனுஷ் | ‛லால் சிங் தத்தா' படத்தை இணையதளத்தில் வெளியிட்ட இரண்டு பேர் கைது | ஹிந்தியில் அறிமுகமாகிறார் அனுபமா பரமேஸ்வரன் | ஆர்ஆர்ஆர் படத்திற்கு 99 சதவீதம் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு : அனுராக் காஷ்யப் கணிப்பு | கிர்த்தி ஷெட்டிக்கு இரண்டாவது அதிர்ச்சி |
சிம்புவும் தனுஷும் ஆரம்பகாலத்தில் போட்டி நடிகர்களாக கருதப்பட்டவர்கள். ஆனால் ஒருகட்டத்தில் சிம்பு மார்க்கெட்டில் பின்தங்கிய நிலையில் தனுஷின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் எகிறி விட்டது. தற்போது பாலிவுட், ஹாலிவுட் என்று மிகப்பெரிய நடிகராகிவிட்டார். இந்த நிலையில் மாநாடு படத்திற்கு பிறகு மீண்டும் தனது வேகத்தை அதிகப்படுத்தியுள்ள சிம்பு, தனுஷ் உடனான தனது போட்டியை மறுபடியும் தொடங்கி இருப்பதாகத் தெரிகிறது.
அதன்காரணமாக மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் தான் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தையும் அதேநாளில் வெளியிடுவதற்கு தயாராகி வருகிறார் சிம்பு. இப்படியொரு செய்தி வெளியானது அடுத்து மறுபடியும் சிம்பு-தனுஷ் ரசிகர்கள் இடையே சோசியல் மீடியாவில் பரபரப்பு நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது.