செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தமிழில் முனி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வேதிகா. தொடர்ந்து தமிழ், மலையாளம் என மாறி மாறி நடித்தவர் வசந்தபாலனின் காவியத்தலைவன் படத்தில் சற்று கவனிக்க வைத்தார். ஆனாலும் கடந்த 2017ல் தமிழில் அவர் நடித்த காஞ்சனா 3 படத்தை தொடர்ந்து கடந்த 5 வருடங்களாக அவரது படம் எதுவும் தமிழில் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது கஜானா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் வேதிகா. நீண்ட காலத்திற்கு முன்பு தமிழில் அடிக்கடி வெளியான புதையலை தேடிச்செல்லும் கான்செப்ட்டில் தான் இந்தப் படம் உருவாகியுள்ளது.
பிரபதீஷ் சாம்ஸ் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் புதையலைத் தேடி செல்லும் குழுவின் தலைவியாக நடித்துள்ளார் வேதிகா. மேலும் யோகிபாபு மற்றும் மொட்டை ராஜேந்திரன் இருவரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் யூடியூப் நடத்துபவராக நடித்துள்ளார் யோகிபாபு. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காட்டில் தான் படமாக்கப்பட்டுள்ளன என்றும் வேதிகாவுக்கு நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன என்றும் இயக்குனர் கூறியுள்ளார்.