படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த படம் கமல் படங்களிலேயே அதிக வசூலை பெற்ற படமாக அமைந்துள்ளது. மேலும் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளியான கமல் படம் அவருக்கு கம்பேக் கொடுத்துள்ள படமாகவும் அமைந்துள்ளது. இதற்காக தொடர்ந்து நன்றி தெரிவித்து வருகிறார் கமல்ஹாசன். ஏற்கனவே படம் வெளியான ஐந்து மொழிகளில் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருந்தார் கமல்ஹாசன். இப்போது உலகளவில் வெளியிடப்பட்ட நாடுகளிலும் விக்ரம் படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்காகவும் தமிழ் சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோவை கமல் இப்போது வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியிருப்பதாவது : தமிழர்கள் இல்லாத நாடு இல்லை. தேன் மதுர தமிழோசை ஒலிக்காத ஊரில்லை எனும் அளவுக்கு உலகம் முழுக்க பரந்து விரிந்துள்ள என் தமிழ் சொந்தங்களுக்கு என் வணக்கம். திரையிடப்பட்ட நாடுகளில் எல்லாம் விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த பிரம்மாண்ட வெற்றியை எனக்கு பரிசளித்த என் தொப்புள் கொடி உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். சிறந்த படங்கள் மூலம் உங்களை தொடர்ந்து என்டர்டெயின்ட் செய்வேன். இதுவே நான் உங்களுக்கு செய்யும் நன்றி என அறிவேன். அதை செய்வேன். உயிரே, உறவே, தமிழே நன்றி.
இவ்வாறு கூறியுள்ளார்.