பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? | முக்கிய நிபந்தனையுடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பும் கிச்சா சுதீப் | '2018' பட இயக்குனரின் டைரக்ஷனில் கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன்லாலின் மகள் | தான் படித்த கல்லூரியின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் இதுவரையிலும் உலகம் முழுவதும் 250 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தைப் பார்த்த தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி வியந்து கமல்ஹாசனை தன் வீட்டிற்கு அழைத்து விருந்தளித்து கவுரவித்துள்ளார். படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் அதில் கலந்து கொண்டுள்ளார். ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த ஹிந்தி நடிகர் சல்மான்கானும் இந்த விருந்தில் கலந்து கொண்டார்.
இது குறித்து சிரஞ்சீவி, “எனது அன்பான பழைய நண்பர் கமல்ஹாசனை அழைத்து, நேற்று இரவு எனது வீட்டில் கவுரவித்து கொண்டாடுவதில் முழு மகிழ்ச்சி. 'விக்ரம்' படத்தின் அற்புதமான வெற்றிக்காக எனது நெருங்கிய சல்லு பாய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் குழுவினர் உடன்… என்ன ஒரு தீவிரமான, த்ரில்லான படம் இது. எனது நண்பா, உனக்கு மேலும் சக்தி கிடைக்க வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.