பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வெளியானது. ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோருடன் கிளைமாக்ஸில் சில நிமிடங்களே வந்து செல்லும் ரோலக்ஸ் என்கிற கதாபாத்திரத்தில் சூர்யாவும் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் இந்த படத்தின் அடுத்த பாகத்திற்கான ஒரு அடித்தளமாகவும் அடுத்த பாகத்தில் கமல் சூர்யா இருவரும் இணைந்து முழுநீள படத்தில் நடிப்பார்கள் என்பதையும் தெளிவாக கூறியுள்ளது.
இந்த படத்தின் மூலம் திரையுலகில் மற்ற எந்த ஹீரோவும் செய்யாத ஒரு புதிய சாதனையை கமல் மட்டுமே படைத்துள்ளார். அதாவது தந்தை மகன் என இரண்டு தலைமுறை நடிகர்களுடன் அதிக படங்களில் நடித்தவர் என்கிற ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார் கமல். அதாவது நடிகர் திலகம் சிவாஜி, அவரது மகன் பிரபு, சிவகுமார் அவரது மகன் சூர்யா, ஜெயராம் அவரது மகன் காளிதாஸ் என, தந்தை மகன் இருவருடனும் இணைந்து அதிக படங்களில் பணியாற்றிய ஹீரோ என்கிற பெருமையை விக்ரம் படத்தின் மூலம் கமல் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.