லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா |

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 169 படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த தகவல்கள் மட்டும்தான் தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிக்கிறார்கள், முக்கிய கதாபாத்திரங்களில் யார் நடிக்கிறார்கள் என சில செய்திகள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் கதாநாயகியாக நடிப்பதாகவும், மேலும் ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள்மோகன் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் சிவராஜ்குமார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ரஜினியை சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்தவன் நான். அவருடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய விருப்பம். அது அவரது 169 படத்தில் எனக்கு சாத்தியமாகி இருக்கிறது” என்று கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் துவங்க இருக்கிறது என்றும் செப்டம்பரில் பெங்களூரு மற்றும் மைசூர் ஆகிய பகுதிகளில் நடக்கும் படப்பிடிப்பில் சிவராஜ்குமார் கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.




