நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. நயன்தாராவின் திருமணத்தை தொடர்ந்து அவரது முதல் படமாக ஜூன்-17ல் வெளியாக இருக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள O2. இந்த படத்தை ஜிஎஸ் விக்னேஷ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் 10 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்துள்ளார் நயன்தாரா. சுவாசப்பிரச்சனையால் எப்போதும் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்திருக்கும் தனது மகனுடன் விபத்தில் சிக்கிக்கொண்ட பேருந்துக்குள் மாட்டிக்கொள்ளும் நயன்தாரா தனது மகனை எப்படி அங்கு இருப்பவர்களிடம் இருந்து காப்பாற்றுகிறார் என்பதை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் மீட்பு படை உயர் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை லேனா நடித்துள்ளார். அந்த படத்தில் தான் நடித்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த தகவலை அவரே சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். கே.வி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தில் டாக்டராக வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமான இவர், இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான திரவுபதி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.