கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா திருமணம், பிரபலங்கள் வாழ்த்து | விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா | ஹீரோயின் ஆன யு-டியூப் பிரபலம் | 'லியோ' படத்திற்கு இப்போதே முன்பதிவு ஆரம்பம் | ‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு |
ஹாலிவுட் படங்கள் போன்று இங்கும் சூப்பர் மேன் படங்கள் வரத் தொடங்கி விட்டது. தமிழில் சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தில் சூப்பர் மேனாக நடித்தார். மலையாளத்தில் மின்னல் முரளி படம் வெளிவந்தது. கன்னடத்தில் விக்ராந்த் ரோணா தயாராகி வருகிறது. தமிழில் தற்போது ஜெய் பிரேக்கிங் நியூஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் புராண கதாபாத்திரமான ஹனுமனை சூப்பர் மேனாக சித்தரித்து ஹனு-மான் என்ற படம் பல மொழிகளில் உருவாகி வருகிறது. இதில் தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதில் சூப்பர் மேனுக்கு வில்லனாக மைக்கேல் என்ற கேரக்டரில் வினய் ராய் நடிக்கிறார். பேட்மேனுக்கு ஜோக்கர், சூப்பர்மேனுக்கு லெக்ஸ் லூதர் போல், ஹனு-மானுக்கு சூப்பர் வில்லன் இந்த மைக்கேல்.
இது குறித்து படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா கூறியதாவது: மைக்கேல் பொதுவாக வரும் மோசமான சூப்பர் வில்லன் அல்ல. இப்படத்தில் அவர் ஒரு சிறந்த கேரக்டர். இந்த வில்லன் எங்கிருந்து வருகிறான்? ஏன் அஞ்சனாத்ரி லோகத்திற்கு வருகிறான்? இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய இன்னும் சிறிது காலம் நீங்கள் காத்திருக்க வேண்டும். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. பிரபல நட்சத்திரங்கள் மற்றும் உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்படத்தில் பணியாற்றுகின்றனர். நடிகை வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். என்றார்.