இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்துள்ள விக்ரம் படம் ரசிகர் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளாவிலும் விக்ரம் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்தவகையில் படம் வெளியாகி இரண்டே நாட்களில் விக்ரம் படம் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விக்ரம் படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்திருக்கிறார். அதையடுத்து கமலஹாசனை தொடர்புகொண்டு விக்ரம் படம் ரொம்ப சூப்பரா இருக்கு, கலக்கிட்டீங்க கமல் என்று சொல்லி அவரை பாராட்டி இருக்கிறார். அவர் மட்டுமின்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோரையும் போனில் தொடர்பு கொண்டு பாராட்டி இருக்கிறார் ரஜினி.