நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி தற்போதுதான் கோலிவுட்டில் நடிகையாக காலடி எடுத்து வைத்துள்ளார். அதிதி ஷங்கர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் முதன்முதலில் நடித்துள்ளார். மருத்துவ படிப்பை முடித்த அதிதி அதன் பிறகு நடிகையாக தனது திறமையை காட்ட ஆசைப்பட்டு சினிமாவில் நுழைந்திருக்கிறார்.
இதுவரை விருமன் படத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் அதிதி அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் அவரது கிரஷ் யார் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் தான் பலருக்கும் ஆச்சர்யம். தமிழ் நடிகர்கள் யார் பெயரையும் கூறவில்லை. கன்னட நடிகர் யஷ் தான் தன் கிரஷ் என்று சொல்லி இருப்பது விவாதமாகி போயுள்ளது.