'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

அரவிந்த்சாமி நடித்து முடித்துள்ள நரகாசுரன், சதுரங்க வேட்டை 2, கள்ளபார்ட் ஆகிய 3 படங்கள் வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. இதில் கள்ளபார்ட்டுக்கு மட்டும் இப்போது நல்ல காலம் பிறந்திருக்கிறது. வருகிற 24ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த்சாமி மற்றும் ரெஜினா நடித்துள்ள இந்த படத்தை என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு இயக்குனராக அரவிந்த் கிருஷ்ணா பணியாற்ற, இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா பணியாற்றி உள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ராஜபாண்டி கூறியதாவது: படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கள்ளபார்ட் என்பது பொருந்தும் அதனாலேயே படத்திற்கு கள்ளபார்ட் என்று பெயர் வைத்துள்ளோம். ஹைஸ்ட் திரில்லரில் நடக்கும் உணர்வு பூர்வமான ஒரு போராட்டம் தான் இந்த படத்தின் திரைக்கதை. இதுவரை யாரும் தொடாத ஒரு கதை களத்தை இதில் பார்க்கலாம். படம் நிச்சயம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்கிறார்.




