பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
மாநாடு படத்தை அடுத்து மன்மத லீலை என்ற படத்தை இயக்கிய வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு படம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கிருத்தி ஷெட்டி நாயகியாக நடிக்க, அரவிந்தசாமி வில்லனாக கமிட்டாகி இருக்கிறார். ஏற்கனவே மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த்சாமி அதன் பிறகும் சில படங்களில் நடித்தவர், இப்போது மீண்டும் இந்த படத்தில் அதிரடியான வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது இவர்கள் நடிக்கும் ஆக்சன் காட்சியை ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைத்து படமாக்கி வருகிறார்கள். இந்த சண்டைக் காட்சியை ஸ்டன்ட் மாஸ்டர் மகேஷ் மேத்யூ படமாக்கி வருகிறார். திரில்லர் மற்றும் பீரியட் கதையில் உருவாகும் இந்த படத்திற்கு இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைக்கிறார்கள்.