'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

அரவிந்த்சாமி, ரெஜினா, பார்த்தி, ஹரிஷ் பெராடி உள்பட பலரது நடிப்பில் ராஜபாண்டி இயக்கியுள்ள படம் கள்ளபார்ட். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளியாக அரவிந்த்சாமி நடித்துள்ளார். ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு அரவிந்த்சாமி செய்யும் மர்மமான திரில்லான வேலைகள் தான் இந்தப்படத்தின் கதை. இந்த டீசரில் இடம் பெற்றுள்ள அனைத்து காட்சிகளும் த்ரில்லிங்காக உள்ளது. அதோடு குருவுக்கு தெரிஞ்சா உயிரோடவே இருக்க முடியாது என்று ரெஜினா கூறுகிறார். அதற்கு அரவிந்தசாமி, குருவை என்னால் அழிக்க முடியாது. ஆனால் தோற்கடிக்க முடியும் என்று பேசும் வசனம் ஹைலைட்டாக அமைந்திருக்கிறது. சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக இந்த படம் உருவாகி இருப்பதை டீசர் பார்க்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது. ஜூன் 24ல் இந்த படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




