அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

கர்நாடகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக 10 ஆண்டுகள் பணியாற்றியவர் அண்ணாமலை. இவர் கரூர் மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டியில் பிறந்தவர். அரசியல் ஆர்வம் காரணமாக தனது ஐபிஎஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தற்போது தமிழக பாஜகவில் இணைந்து மாநில தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் கன்னடத்தில் உருவாகியுள்ள அரபி என்ற படத்தில் அண்ணாமலை ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இரண்டு கைகளும் இல்லாமல் சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகளை செய்த நீச்சல் வீரர் விஸ்வாசின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகியுள்ளது. இதில் விஸ்வாசின் பயிற்சியாளராக அண்ணாமலை நடித்துள்ளார். முதலில் சினிமாவில் நடிப்பதற்கு தயங்கிய அண்ணாமலை இயக்குனர் சொன்ன கதை பிடித்து போனதால் நடித்திருக்கிறார். படத்தின் டீசர் மாலை வெளியாகிறது. இந்த படத்தில் நடித்ததற்கு பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கி நடித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.