ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படம், ஜூன் 3ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கமல் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
கேள்விகளுக்கு கமல் அளித்த பதிலில் கூறியதாவது: படத்தில் கூட இவ்வளவு வேலை பார்க்கவில்லை. இப்போது சுழன்று சுழன்று வேலை பார்க்கிறேன். 4 வருடம் என் ரசிகர்களை காக்க வைத்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி கூறினால் அவர் அன்னியப்பட்டுவிடுவார். நல்ல படம் எடுத்துள்ளோம். அது வெற்றி பெறும் என நம்புகிறோம். ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது. என்னிடம் பெரிய அளவில் பணம் இல்லை. என்னுடைய வருமானத்தை மக்களுக்காக பயன்படுத்துவேன்.
கருணாநிதி பிறந்தநாளில் படம் வெளியாவது எதிர்பாராமல் நடந்தது. என் திறமையை வளர்த்து கொள்ள முன்னோடியாக இருந்ததில் கருணாநிதியும் ஒருவர். 'விக்ரம் 3'க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர் என்பதை நான் முடிவு செய்து விட்டேன். 'இந்தியன் 2' எனது அடுத்த படங்களில் நிச்சயம் இடம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
லோகேஷ் கனகராஜ் பேசுகையில், நடிகர் கமலுக்கு என் முதல் நன்றி. அவரை பார்த்து தான் சினிமா கற்றுக் கொண்டேன். விக்ரம் படத்தில் திருப்திகரமான விஷயம் ஒன்று நடந்துள்ளது. படத்தை பார்த்தால் உங்களுக்கு அது புரியும் என பேசினார்.