அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா | ஏவிஎம் சரவணன் மறைவு என் மனதை பாதிக்கிறது : ரஜினி |

சமீபத்தில் தெலுங்கில் டாக்டர் ராஜசேகர் நடிப்பில் அவரது மனைவி ஜீவிதா இயக்கத்தில் வெளியான சேகர் என்கிற படம் வெள்ளியன்று வெளியானது. இந்தநிலையில், பைனான்சியர் ஒருவர் அவர்கள் மீது தொடுத்த செக் மோசடி வழக்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் அனைத்து தியேட்டர்களிலும் சேகர் படம் திரையிடப்படுவது நீதிமன்ற உத்தரவின்படி நிறுத்தி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று நீதிமன்றத்தில் இந்த படத்தின் இயக்குனரான ஜீவிதா ராஜசேகர் இந்த படம் நிறுத்தப்பட்டது முறையற்றது என்று கூறி தனது தரப்பு வாதத்தை தனது வழக்கறிஞர் மூலமாக முன் வைத்தார். இதை அடுத்து இந்த படத்தின் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது,
இதுகுறித்து டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகர் கூறும்போது, “இந்த படத்தை நிறுத்தியது முறையற்றது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் சேகர் படத்தின் விடுமுறை நாட்களின் வசூல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் சேகர் திரைப்படம் இழந்த அதனுடைய அங்கீகாரத்தை மீண்டும் பெறும் என நம்புகிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தை திரையிடுவது குறித்து என்ன முடிவு எடுக்கிறார்களோ அதற்கு உறுதுணையாக நிற்போம்” என்று கூறியுள்ளார்.
அதே சமயம் இந்த படத்தை தற்போது உடனடியாக திரையிடாமல் மறு ரிலீஸ் தேதியை அறிவித்து மீண்டும் திரையிட முடிவு செய்துள்ளார்களாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.