முதல்முறையாக ரீ ரிலீஸ் ஆகும் குணா! | தேவி ஸ்ரீ பிரசாத்தை தொடர்ந்து படங்களில் இருந்து நீக்கும் தயாரிப்பு நிறுவனம்! | சிவகார்த்திகேயன், ஏ. ஆர். முருகதாஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? | பிளாஷ்பேக்: “கன்னியின் காதலி” தந்த 'கவியரசர்' கண்ணதாசன் | தெலுங்கில் அறிமுகமாகும் விவேக் மற்றும் மெர்வின்! | யாரை சொல்கிறார் திரிஷா? சூசகமாக போட்ட பதிவு! | பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் | அமரன் படத்தின் வெற்றி விழா- முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு! | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஸ்ரீ லீலா! | அஜித் குமார் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? நடிகர் ரமேஷ் கண்ணா வெளியிட்ட தகவல் |
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் வீட்டில் இருந்து யானை தந்தங்கள் மீட்கப்பட்டது. வனத்துறையின் உரிய அனுமதி இல்லாமல் யானை தந்தங்கள் வைத்திருப்பது இந்திய வனபாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். இதனால் கேரள மாநில வனத்துறை மோகன்லால் மீது பெரும்பாபூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் கேரள அரசு மோகன்லால் உரிய அனுமதி முன்பே பெற்றுள்ளார் என்று கூறி அவர் மீதான வழக்கை வாபஸ் பெற நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதை எதிர்த்து பவுலோஸ் மற்றும் ஜேம்ஸ் மேத்யூ என்ற இரு சமூக ஆர்வலர்கள் முதலில் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து. இருவரும் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததோடு. பவுலோஸ் மற்றும் ஜேம்ஸ் மேத்யூவின் வாதங்களை கேட்ட பின்னர்தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும். என்று பெரும்பாவூர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. அதோடு இந்த விசாரணையை 3 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் காலக்கெடு விதித்தது. இதனால் இந்த யானை தந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.