காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் |
தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம், 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரான்சில், 75வது கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் பல நாட்டு திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. தமிழ் திரைப்பட உலகில் இருந்தும் பல நடிகர்கள், படைப்பாளிகள் கேன்ஸ் சென்றுள்ளனர். இந்நிலையில், நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படம், கேன்ஸ் விழாவில் நேற்று முன்தினம் திரையிடப்பட்டது. மொத்தம் 100 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் முழுதும் ஒரே 'ஷாட்'டில் எடுத்து முடிக்கப்பட்டது.
இதற்காக, 64 ஏக்கர் நிலத்தில் 50க்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டு, 90 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இத்திரைப்படம் கேன்ஸ் விழாவில் நேற்று முன்தினம் திரையிடப்பட்டது. 'நான்லீனியர்' எனப்படும், சம்பவங்கள் முன் பின் மாறி, மாறி நிகழும் திரைக்கதையை ஒரே ஷாட்டில் எடுத்துள்ளதை கண்டு சர்வதேச திரைக்கலைஞர்கள் திகைத்து, ஆச்சரியம் அடைந்தனர். இரவின் நிழல் திரைப்படம், கேன்ஸ் விழாவில் சிறப்பு கவனம் பெற்றுள்ளது.