விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தில் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்சேதுபதி நடித்திருப்பதுடன் மலையாள நடிகர் பஹத் பாசில் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல இந்த படத்தில் பஹத் பாசிலையும் சேர்த்து மலையாள திரையுலகை சேர்ந்த 6 நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்திருந்த நரேன் இந்த படத்திலும் போலீஸ் அதிகாரியாகவே நடித்துள்ளார். கமலின் நண்பரும், மலையாள நடிகருமான ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், ஏற்கனவே கோலிசோடா 2 படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் செம்பான் வினோத் ஜோஸ், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
அங்கமாலி டைரீஸ் படம் மூலம் புகழ்பெற்ற இளம் நடிகர் ஆண்டனி வர்கீஸ் இந்த படத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே மாஸ்டர் படத்தில் நடிப்பதாக இருந்து கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு அவருக்கு கை நழுவி போனது. இவர்கள் தவிர நடிகர் ஹரீஷ் பெராடி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவரும் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.