2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மலையாள திரையுலகில் ஏற்கனவே மாளவிகா மோகனன், மாளவிகா மேனன், மாளவிகா நாயர் சமீபத்திய வரவாக ஜெயராமின் மகன் மாளவிகா ஜெயராம் என மாளவிகா என்கிற பேரில் அதிகப்படியான நடிகைகள் வலம் வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மாளவிகா ஸ்ரீநாத் என்கிற நடிகை மலையாள திரையுலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைக்கிறார். இவரை அறிமுகப்படுத்துகிறார் பிரபல இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.
காயங்குளம் கொச்சுண்ணி என்கிற படத்தை தொடர்ந்து நிவின்பாலியை வைத்து தற்போது படம் ஒன்றை இயக்கி வருகிறார் ரோஷன் ஆண்ட்ரூஸ். இந்தப்படத்தில் தான் மாளவிகா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே மதுரம் என்கிற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை அறிமுகப்படுத்துவது குறித்து ரோஷன் ஆண்ட்ரூஸ் கூறும்போது, “நிச்சயமாக நீ ஒரு நாள் பெரிய நடிகையாக இந்த திரையுலகில் வலம் வருவாய்” என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “உங்கள் வார்த்தைகளை நிச்சயம் நிஜமாக்குவேன்” என பதிலுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் மாளவிகா ஸ்ரீநாத்.