போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

இசைஞானி இளையராஜா சென்னையை தொடர்ந்து கோவையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். ஜுன் 2ல் இளையராஜாவின் 80வது பிறந்தநாள். அன்றைய தினமே தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தோடு, கோவை மக்களை இன்னிசை மழையில் நனையவிடப்போகிறார். கோவை கொடீசியா வளாகத்தில் மாலை 6.30 மணியளவில் ‛ராஜா' இசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை தினமலரும் இணைந்து நடத்துகிறது.
இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான மனோ, கார்த்திக், உஷா உதூப், எஸ்பிபி சரண், யுகேந்திரன் வாசுதேவன், ஸ்வேதா மோகன், விபாவரி ஆப்தே ஜோஷி, அனிதா, பிரியா ஹேமேஷ், சுர்முகி உள்ளிட்டோர் பாட உள்ளனர். இவர்களோடு இளையராஜாவும் ஓரிரு பாடல்களை பாட உள்ளார். அதோடு அவர் இசையமைத்த சில பாடல்கள் உருவான விதம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களையும் ரசிகர்களுக்கு வழங்க உள்ளார்.
அப்புறம் என்ன கோவை மக்களே இளையராஜாவின் இன்னிசை மழையில் நனைய தயார் தானா...! நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை உடனே புக் செய்ய அருகில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் : https://insider.in/raaja-live-in-concert-coimbatore-2-june-2022/event