அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
சுந்தர்.சியின் உதவியாளரான பத்ரி இதுவரை காமெடி படங்கள் இயக்கி இருக்கிறார். முதன் முறையாக ஒரு சைக்கோ கில்லர் படம் இயக்கியுள்ளார். அது பட்டாம்பூச்சி. இதில் சைக்கோவாக ஜெய் நடிக்க அவரை பிடிக்க துரத்தும் போலீஸ் அதிகாரியாக சுந்தர்.சி நடித்துள்ளார். குஷ்பு தயாரித்துள்ளார்.
ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர். கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசை அமைகிறார் . சமீபத்தில் வெளியாகிய பட்டாம்பூச்சி எனும் முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 'வேட்டைகள் ஆரம்பம் ' எனும் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
பொதுவாக ஹீரோ ஓப்பனிங் சாங், பில்டப் சாங், டூயட் சாங், ரோமான்ஸ் சாங்க, சேட் சாங் இப்படித்தான் படங்களில் இடம்பெறும். முதன் முறையாக இந்த படத்தில் சைக்கோ கில்லர் சாங் இடம் பெற்றுள்ளது. ஒரு சைக்கோவின் கொலையும், அவனது கேரக்டரும் எப்படி இருக்கும் என்பதை இந்த பாடலில் ரத்தம் தெரிக்க சொல்லியிருக்கிறார்கள். பாடலை பா.விஜய் பாடலை எழுதியுள்ளார், இசை அமைப்பாளர் நவநீத் சுந்தர், நிவாசுடன் இணைந்து பாடி உள்ளார். பாடல் வரிகள் இதோ...
யாரோ நீ யாரோ தீய தூதனே
சாவின் ராஜாங்கம் ஆளும் தேவனே
ஈரம் இல்லாமல் கொல்லும் ஜீவனே
கண்ணில் பாதாளம் காட்டும் மாயனே
கெஞ்சிக் கேட்டால் கொஞ்சிக் கொஞ்சி
கொன்று தீர்ப்பான் இந்த நல்லவன்
மூச்சில்லாமல் பேச்சில்லாமல்
மேலே சேர்ப்பதில் மேதையானவன்
வேட்டைகள் வேட்டைகள் ஆரம்பம்
கூச்சல்கள் கூச்சல்கள் ஆனந்தம்
யாரிவன் கோட்டைக்குள் போனாலும்
மண்ணோடு மண்ணாகும் பேரின்பம்
மூச்செல்லாம் பேச்செல்லாம் நின்றாலும்
மொத்தத்தில் உள்ளத்தில் சந்தோஷம்
இப்படி இந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன.