மாற்றி அறிவிக்கப்பட்ட மம்முட்டியின் பஷூக்கா ரிலீஸ் தேதி | 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரித்விராஜ் படத்தை இயக்கும் ஜீத்து ஜோசப் | கேரள கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகசைதன்யா | துல்கர் சல்மான் படம் மூலம் மீண்டும் டைரக்சனுக்கு திரும்பும் மின்னல் முரளி ஒளிப்பதிவாளர் | பிளாஷ்பேக் : மூன்றாம் பிறை படத்திற்காக ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்? | பிளாஷ்பேக் : ஒரே பிரேமில் 5 சின்னப்பா : 80 வருடங்களுக்கு முன்பே தொழில்நுட்ப சாதனை | எப்படி இருந்த ஷிவானி இப்படி ஆகிட்டாங்களே | ரஞ்சனி சீரியலில் பவித்ரா ஜனனி என்ட்ரியா? | மெளன ராகம் ஜோடி இப்போது ரியல் ஜோடி ஆகிறார்கள் | சினிமாவில் பட்ட அவமானம் : மனம் திறக்கும் மூசா அபிலாஷ் |
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்களை இணைத்து ஒரு படம் இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இந்த படத்தில் அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். அதேசமயம் பத்ரி நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார் சுந்தர். சி. இப்படத்தில் வில்லனாக ஜெய் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டனர். அந்த போஸ்டரில், இந்த படத்திற்கு பட்டாம்பூச்சி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பதோடு இப்படம் மே மாதம் ரிலீசாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.