போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்-13ம் தேதி வெளியாக உள்ளது.. ஆனாலும் இப்போது வரை இந்தப்படத்தில் வில்லனாக எந்த நடிகர் நடித்துள்ளார் என்கிற விஷயத்தை சஸ்பென்சாகவே வைத்துள்ளார்கள். முதலில் செல்வராகவன் வில்லன் என்றார்கள்.. ஆனால் அவரோ வில்லன்கள் கூட்டத்துடன் பேச்சு வார்த்தை நடத்தும் அதிகாரியாக தான் நடித்துள்ளார்.
இந்தப்படத்தின் டிரைலரில் முகமூடி அணிந்த வில்லன் நபரை பார்த்துவிட்டு இந்தப்படத்தில் நடித்துள்ள மலையாள வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ தான் அந்த முகமூடி மனிதர் என்றும், அவர்தான் வில்லனாக நடித்துள்ளார் என்றும் கூட சொல்ல ஆரம்பித்தார்கள்.
ஆனால் அந்த முகமூடி மனிதரே தான் யார் என்கிற உண்மையை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் வேறு யாருமல்ல.. பாலிவுட் நடிகர் அங்கூர் விகால் தான்.. அதுமட்டுமல்ல மூன்று வருடங்களுக்கு முன் தமிழில் வெளியான மெஹந்தி சர்க்கஸில் கதாநாயகியின் முறை மாப்பிள்ளையாக நடித்திருந்ததும் இவர் தான். ஆனால் பீஸ்ட் படத்தில் இவர் தான் மெயின் வில்லனா என்கிற கேள்விக்கு மட்டும் மனிதர் பதில் சொல்லாமல் நழுவி விட்டார்..