பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? |
வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்பவர் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன். ஒத்த செருப்பு படத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்து வியக்க வைத்தார். இதற்காக தேசிய விருதும் கிடைத்தது. இப்போது அடுத்த முயற்சியாக இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். ஒரே ஷாட்டில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மே 1ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த உள்ளார் பார்த்திபன். இதுபற்றி அவர் கூறுகையில், சென்னை தீவுத்திடலில் மே 1ல் இரவின் நிழல் இசை வெளியீட்டு விழா நடக்கிறது. இதில் பங்கேற்க இந்திய அளவிலான பிரபலங்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இது என் பட இசை வெளியீடு என்பதை விட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எடுக்கும் விழா என்று சொல்லலாம். இசையில் அவர் செய்த சாதனையை கவுரவிக்கும் விழாவாகவும் இருக்கும்'' என்றார்.