மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? |
இயக்குனர் வெற்றிமாறனிடம் ‛விசாரணை அசுரன்' போன்ற படங்களில் துணை இயக்குநராக பணி செய்தவர் தமிழ். நிஜத்தில் போலீஸான இவர் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் அந்த பணியை விட்டுவிட்டு சினிமாவிற்கு வந்தார். தற்போது விக்ரம் பிரபுவை வைத்து டாணாக்காரன் என்ற படத்தை இயக்கி உள்ளார். போலீஸ் பயிற்சி கல்லூரியில் நடக்கும் அவலங்களை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஓடிடியில் வெளியாகி உள்ள இந்த படத்தில் கண்டிப்பான காவல் பயிற்சியாளராக நடித்துள்ளார் லால்.
இப்பட அனுபவம் குறித்து லால் நம்மிடம் கூறுகையில், படப்பிடிப்பு ஒன்றுக்காக தற்போது அமெரிக்காவில் உள்ளேன். டாணாக்காரன் படத்திற்கு கிடைக்கும் விமர்சனங்கள் மகிழ்ச்சி அளிக்கிறது. மலையாளத்தில் அமைதியான போலீஸாக நடித்துள்ளேன். அந்த படம் எனக்கு விருதை பெற்று தந்தது. அதன்பின் இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்தேன். இயக்குனர் தமிழ் புதியவர் என்றாலும் படத்திற்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். இந்த குழுவோடு இணைந்து வேலை பார்த்தது நல்ல அனுபவமாக இருந்தது. விக்ரம் பிரபு படப்பிடிப்பில் என்னிடம் பயந்தே இருந்தார். மனுஷன் மிகவும் அமைதியானவர். தேவையின்றி எதும் பேச மாட்டார். நல்ல நல்ல படங்களில் நடித்து அவர் பெயர் பெற வாழ்த்துக்கள்'' என்றார்.