ஆக., 31க்கு தள்ளிப்போன ‛கோப்ரா' | பாஜக-வில் விரைவில் இணைய உள்ள நடிகை ஜெயசுதா | புஷ்பா 2 : பாடல் இசைக்கோர்ப்பு வேலைகள் ஆரம்பம் | நயன்தாரா திருமண நிகழ்வு, டாகுமெண்டரியாக வருகிறது… | அதிதி ஷங்கரை கவர்ந்த தமிழ் ஹீரோ | நியூயார்க்கில் நடைபெறும் சுதந்திர தின பேரணியில் அல்லு அர்ஜுன் | சந்திரமுகி 2 : முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | ராஜு முருகன் படத்திற்காக கெட்டப்பை மாற்றும் கார்த்தி | கமல் - உதயநிதி இணையும் படத்தை இயக்கும் பிரசாந்த் முருகேசன் | கிளாமர் இமேஜ் மாறவேண்டும்: யாஷிகா விருப்பம் |
முதல் முறையாக நடிகர் ஜெய் மற்றும் இயக்குனர் சுந்தர் சி இணைந்து நடித்துள்ள படம் பட்டாம்பூச்சி . சைக்கோ த்ரில்லரில் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் சுந்தர் சி போலீசாகவும், ஜெய் சைக்கோ கொலைக்காரனாகவும் நடித்துள்ளனர். இயக்குனர் பத்ரி இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் ஹனிரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நவ்நீத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குஷ்பூவின் அவ்னி டெலி மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மே மாதம் 13ம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டீசரை நடிகர்கள் விஷால், ஆர்யா மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இன்று வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.