இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

'கேஜிஎப் 2' படம் மூலமாக தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து மற்றுமொரு வசூல் நடிகராக யஷ் உருவாகி இருக்கிறார். தெலுங்கில் டப்பிங் ஆன படங்களில் இதுவரையில் ரஜினிகாந்த் தான் முதலிடத்தில் இருந்தார். அந்த சாதனையை 'கேஜிஎப் 2' படம் மூலம் யஷ் முறியடித்திருந்தார்.
அடுத்து அமெரிக்காவிலும் ரஜினியின் வசூல் சாதனையை முறியடித்துள்ளார் யஷ். அமெரிக்காவில் இதுவரையில் வெளியான தென்னிந்தியப் படங்களில் 'பாகுபலி 2' படம் 20 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து 14 மில்லியன் வசூலுடன் 'ஆர்ஆர்ஆர்' படம் இரண்டாவது இடத்திலும், 8 மில்லியன் வசூலுடன் 'பாகுபலி 1' படம் மூன்றாவது இடத்திலும், 5.5 மில்லியன் வசூலுடன் ரஜினிகாந்த் நடித்த '2.0' படமும் இருந்தது.
இப்போது 6 மில்லியன் வசூலுடன் 'கேஜிஎப் 2' படம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு கன்னடப் படம் இந்த அளவிற்கு அமெரிக்காவில் வசூலிப்பது இதுவே முதல் முறை.