‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
ஜெய் கொடூர சைக்கோ கில்லராகவும், சுந்தர்.சி அவரை பிடிக்க போராடும் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கும் படம் பட்டாம்பூச்சி. 1980களில் நடக்கும் கதை. அவ்னி டெலி மீடியா சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கிறார். ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர். பத்ரி இயக்கி உள்ளார். கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசை அமைகிறார்.
இதற்கு முன் பல சைக்கோ கில்லர் படங்கள் வந்திருந்தாலும் இதில் ஜெய் ஹாலிவுட் படங்களில் வருவது மாதிரியான சைக்கோ கில்லராக நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் ஜெயில் காட்சியில் வரும் ஒரு கானா பாடலை ஜெய் இசையமைக்க அவரின் பெரியப்பா இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார்.
"ஏக்கு மாறு தோ துக்கடா வாங்கடா ஜெயில்ல தவ்லத்தா வாழ்ந்து வரும் நாங்கடா..." எனத் தொடங்கும் இந்தப் பாட்டுக்கு ஜெயில் குத்து என்று பெயரிட்டுள்ளனர். படம் அடுத்த மாதம் வெளிவருகிறது.