திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
துபாய் அமீரகம் இந்திய திரை நட்சத்திரங்களுக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசாவின் மூலம் 10 ஆண்டுகளுக்கு துபாயில் அந்த நாட்டின் குடிமகன் போன்று வாழலாம், தொழில் செய்யலாம். இந்த விசா இதுவரை ஹீரோ, ஹீரோயின்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. முதன் முறையாக வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வரும் நாசருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
நாசர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அமீரகம் சென்றுள்ள நடிகர் நாசருக்கு அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கோல்டன் விசா வழங்கப்பட்டது. கோல்டன் விசா அளித்ததற்காக அமீரக அரசிற்கும் இதற்கு ஏற்பாடு செய்த தொழில் அதிபர் வசிம் அதானுக்குகும் நாசர் நன்றி தெரிவித்துள்ளார்.